பெண் சிறை அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்ததாக வழக்கு - முருகன் விடுதலை

 
murugan Rajiv gandhi

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், சிறையில் இருந்தபோது பெண் அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார். 

Image

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை பெற்று வந்தவர்களில் நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன்,  ஜெயக்குமார் , ராபர்ட் பயஸ் ஆகிய 6 பேரையும், விடுதலை செய்து  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து  நேற்று, ஜெயக்குமாரும், ராபர்ட் பயஸும் சென்னை புழல் சிறையில் இருந்தும், முருகன் , சாந்தன் ஆகிய இருவரும் வேலூர் மத்திய சிறையில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.  அவர்கள் 4 பேரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால், போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு திருச்சியில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார். 

சிறையில் இருந்தபோது முருகன், பெண் அதிகாரியிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக, கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இருந்து வேலூர் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் முருகன் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. முருகனும் அவரது மனைவி நளினியும் வெளிநாடு செல்வதற்கு இந்த வழக்கு இடையூறாக இருந்து வந்தது. இந்த வழக்கில் இருந்து முருகன் தற்போதுவிடுவிக்கப்பட்டதை அடுத்து அவர் இலங்கைக்கே செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிகிறது.