கொலை மிரட்டல் - நடிகர் எஸ்.வீ. சேகர் காவல் நிலையத்தில் புகார்

 
svs

நடிகர் எஸ்.வீ.சேகருக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில்  போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

sv

நடிகரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வீ. சேகர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய நிலையில் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வரும் இவர் ,சில ஆண்டுகளாக அரசியல் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியுள்ளார். தொடர்ந்து பாஜகவிற்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலை விமர்சித்து வரும் எஸ்.வீ. சேகர் பாஜக தலைவர் அண்ணாமலை மீது நேரடியாகவும் , மறைமுகமாகவும் தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

sv

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் எஸ்.வீ. சேகர் புகார் அளித்துள்ளார்.  சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா தேர்தலில் பாஜக தலைவர்களின் பங்களிப்பு குறித்து ஊடகங்களில் பேசியதாகவும் , இதனால் ராமலக்ஷ்மி முருகன் என்பவர் தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்ட விடுத்ததாகவும் பட்டினம் காவல் நிலையத்தில் எஸ்.வீ. சேகர் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது.