"தமிழகத்தில் கொலை அதிகரிக்கவில்லை"- காவல்துறை விளக்கம்
Nov 12, 2026, 16:39 IST1794481787307
தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அதிகரிக்கவில்லை என சட்டம், ஒழுங்கு தரவுகளை வெளியிட்டு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
அதன்படி, கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 1,323 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. நடப்பாண்டு இதுவரை 1,267 கொலை வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. குடும்ப தகராறால் 28%, சிறிய தகராறுகளில் 23% கொலைகளும் நடைபெற்றுள்ளன. முறையற்ற உறவு, மதுபோதையால் தலா 13% கொலைகள் நடந்துள்ளன. 3,077 கொலை வழக்குகளில் தொடர்புடைய 95.3% குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 20,450 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 1,698 பேர் சிறையில் அடைகக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

