தூத்துக்குடியில் புதுமண தம்பதி கொலை - ஒருவர் கைது

 
புதுமண தம்பதி கொலை - ஒருவர் கைது 

தூத்துக்குடியில் திருமணமாகி 3 நாட்களே ஆன காதல் ஜோடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி முருகேசன் நகரில் வசித்துவந்தவர்கள் மாரிச்செல்வம் - கார்த்திகா ஜோடி. கடந்த மாதம் 30ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய கார்த்திகா, மாரிச் செல்வத்தை திருமணம் செய்துள்ளார். இருவரும்  வாடகை வீட்டில் வசித்துவந்தனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், மாரிச்செல்வம் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர் என்பதால் கார்த்திகாவின் குடும்பத்தினர் வீடுபுகுந்து இருவரையும் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடினர். 

உடலை கைப்பற்றிய காவல்துறை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கார்த்திகாவின் உறவினர்கள் கொலையில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.. இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.