ஒருதலை காதலால் பள்ளி மாணவிக்கு கத்திக்குத்து - பட்டப்பகலில் நடந்த பயங்கரம்!!

 
ttn

பள்ளி மாணவி இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tn

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர்,  இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளார்.  மாணவியை பின்தொடர்ந்து இளைஞர் ஒருவர் வந்தநிலையில்,  மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து மாணவியின் வயிற்றுப் பகுதியில் குத்தியுள்ளார்.  இதை சற்றும் எதிர்பாராத மாணவி ரத்த வெள்ளத்தில் அலறி துடித்துள்ளார். இதையடுத்து  அங்கிருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அத்துடன் மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை கட்டி வைத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.  பள்ளி வளாகத்தின் அருகிலேயே நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

tn

மாணவியை கத்தியால் குத்தியவர் 26  வயதான ஆஷிக் என்பவர் என்று தெரியவந்தது. ஆஷிக் மாணவியைத் காதலிக்குமாறு வற்புறுத்தி வந்த நிலையில் அதை மாணவி தவிர்த்து வந்ததாகவும்,  இதனால் ஆத்திரமடைந்த அவர் ஆஷிக்  மாணவியை,  தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மார்பு , வயிற்றுப் பகுதியில் குத்தி காயம் ஏற்படுத்தியது  விசாரணையில் தெரிய வந்துள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.