நெல்லையில் கொலை, குற்றங்கள் அதிகரிப்பா?- காவல்துறை விளக்கம்

 
நெல்லை

தமிழகத்தில், குறிப்பாக நெல்லை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கொலை வழக்குகள் அதிகரித்துள்ளதாக வெளியான செய்திகள் தவறானவை என தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

தொடரும் கொலைகள், பதறும் நெல்லை மக்கள் - ஒரே மாதத்தில் 10 உயிர்கள் பறிபோன  பரிதாபம் | crime continues in nellai peoples are panic - hindutamil.in

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடகங்களிலும்‌, சில செய்தி இதழ்களிலும்‌ தமிழ்நாட்டில்‌ குறிப்பாக தென்மண்டத்திலுள்ள திருநெல்வேலி மாநகரம்‌ மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ கொலை குற்றங்கள்‌ அதிகமாகிவிட்டதாக செய்திகள்‌ பரவி வருகின்றன. தென்மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில்‌ கடந்த ஆண்டு ஆகஸ்ட்‌ 2022 வரை 364கொலை சம்பவங்கள்‌ நடைபெற்றிருந்தன . 

இந்த ஆண்டில்‌ ஆகஸ்ட்‌ 2023 வரை 323 கொலை சம்பவங்கள்‌ நடைபெற்றுள்ளன. எனவே சென்ற ஆண்டை காட்டிலும்‌ இந்த ஆண்டு கொலை சம்பவங்கள்‌ குறைந்துள்ளன.  திருநெல்வேலி மாநகர்‌ மற்றும்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ கொலை சம்பவங்கள்‌ அதிகமாகியுள்ளன என்ற தகவலும்‌ தவறானதாகும்‌. இவற்றிலும்‌ சென்ற. ஆண்டை காட்டிலும்‌ இந்த ஆண்டு கொலை வழக்குகள்‌ பின்‌ வருமாறு குறைந்துள்ளன. சென்ற ஆண்டு திருநெல்வேலியில் 25 கொலை நடந்தன. இந்த ஆண்டு அது 15 ஆக குறைந்துள்ளது. 

மேலும்‌ தென்மண்டலத்தில்‌ இரு வேறு சமூகத்தினரிடையே நடைபெற்ற கொலை வழக்குகளைப்‌ பொருத்தவரை சென்ற ஆண்டு 2022 ஆகஸ்ட்‌ வரை 82 வழக்குகளும்‌ இந்த ஆண்டில்‌ 74 வழக்குகளும்‌ பதிவாகி உள்ளன. எனவே சாதிரீதியான கொலை வழக்குகளும்‌ குறைந்துள்ளன. இதேபோல் திருநெல்வேலியில் கடந்த ஆண்டு 10 கொலை வழக்குகள் பதிவாகின. அந்த எண்ணிக்கை இந்த ஆண்டு 7 ஆக குறைந்துள்ளது. 

police

அதுமட்டுமின்றி, மாநிலம்‌ முழுவதும்‌ தாக்கலாண கொலை வழக்குகளை பொருத்தவரை, சென்ற ஆண்டு ஆகஸ்ட்‌ மாதம்‌ வரை 10௦௦ வழக்குகளும்‌ இந்த ஆண்டில்‌ 1052 வழக்குகளும்‌ தாக்கலாகியுள்ளன. எனவே மாநிலம்‌ முழுவதும்‌ ஒப்பிட்டாலும்‌ கொலை வழக்குகள்‌ குறைந்துள்ளன.  தொடர்‌ கண்காணிப்பு மற்றும்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்‌ கொலை வழக்குகள்‌ குறைந்துள்ளன. இவற்றை மேலும்‌ கட்டுப்படுத்திட ஒவ்வொரு வாரமும்‌ தீவிர நடவடிக்கை அந்தந்த மாவட்ட காவல்‌ கண்காணிப்பாளர்கள்‌ மற்றும்‌ மாநகர காவல்‌ ஆணையாளர்கள்‌ மேற்பார்வையில்‌ நடத்தப்பட்டு வரப்படுகிறது. 

குறிப்பாக சாதி ரீதியிலோ, முன்‌ விரோதம்‌ காரணமாகவோ ரெளடிகளுக்கு இடையிலான மோதல்‌ காரணமாகவோ கொலை சம்பவங்கள்‌ நிகழா வண்ணம்‌ கட்டுப்படுத்த நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வரப்படுகின்றன. ரெளடிகள்‌ மற்றும்‌ குற்றவாளிகள்‌ தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறார்கள்‌.  நீதிமன்ற விசாரணை தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ தலைமையிட கூடுதல்‌ காவல்‌ கண்காணிப்பாளர்‌, சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு, முக்கிய வழக்குகளில்‌ நீதிமன்ற விசாரணை கண்காணிக்கப்பட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டணை பெற்றுத்தர நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன” என விளக்கம் அளித்துள்ளது.