"துயர சம்பவத்தில் விளம்பர வெளிச்சமா?" - ஆளுநரை விமர்சித்து முரசொலி கட்டுரை

 
tn

விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்தனர் .இந்த விவகாரம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் , இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.  அத்துடன் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் கொலை வழக்கமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.  விஷ சாராயம் விற்றவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையில்,  அவர்கள் மீது குண்டச்சட்டம் பாயவும் முதல்வர் உத்தரவிட்டார்.  இந்த சூழலில் விஷ சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் அறிக்கை கேட்டுள்ளார் ஆளுநர் ரவி . விஷ சாராயம் எப்படி விற்கப்படுகிறது? எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எத்தனை பேர் கைது? என்பது குறித்து தலைமைச் செயலாளரிடம் ஆளுநர் அறிக்கை கேட்டுள்ளார்.

tn

இந்நிலையில் விஷ சாராயம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் அறிக்கை வெளியிட்டதை விமர்சித்து  முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது. விஷ சாராய உயிரிழப்பு சம்பவத்தில் விளம்பர வெளிச்சம் தேட முற்பட்டுள்ளார் ஆளுநர். விஷசாராய உயிரிழப்பில் அறிக்கை கேட்டது தவறு இல்லை. கேட்ட விதம் தான் தவறு;  விவரங்களை மூத்த அதிகாரியை நேரிலோ ,  தொலைபேசியிலோ  அழைத்து ஆளுநர் அறிந்து கொள்ள முடியும்.

ravi

அறிக்கையாக வெளியிட்டது ஆளுநரின் நெஞ்சமெல்லாம் எவ்வளவு வஞ்சம் என்பதை உணர்த்துகிறது.  பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத், உத்திரபிரதேசம் , மத்திய பிரதேசத்தில் விஷ சாராயம் பலி குறித்து மாநில ஆளுநர்கள் அறிக்கை வெளியிட்டார்களா ? பதவிக்குரிய தகுதியை சீரழிக்கும் வேலையை நிறுத்தி  கொள்வது நாட்டுக்கு நல்லது என்று கடுமையாக விமர்சித்துள்ளது.