முதலில் இதை படியுங்கள் ஆர்.என்.ரவி - முரசொலி தலையங்கம்!

 
rn ravi

தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டுப் போய்க் கொண்டிருப்பதாக கூறிய தமிழக ஆளுநரின் குற்றச்சாட்டுக்கு, திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பதிலடி கொடுத்துள்ளது. 

இது தொடர்பாக முரசொலி தலையங்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டுப் போய்க் கொண்டிருப்பதாகச் சொல்லி வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. கெட்ட எண்ணத்தோடு அவர் சொல்வதாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். அவர் சொல்வது போல யாரும் போகவில்லை. வளர்ச்சியை நோக்கித் தமிழ்நாடு சென்று கொண்டிருப்பதை ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே உறுதி செய்துள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை முதலில் படிக்க வேண்டியது ஆர்.என்.ரவிதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.