குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு - முதல்வரின் அதிரடி நடவடிக்கை!!

 
dmk dmk

குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 40 லட்சம் மதிப்பிலான இரண்டு பயன்பாடு விழிப்புணர்வு வாகனங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இன்று துவக்கி வைத்தார்.

TNGOVT

குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக தமிழக முதல்வர் மேற்கொண்டு வரும் பல்வேறு சீரிய நடவடிக்கைகளில் ஒன்றாக தமிழ்நாடு காவல்துறை, அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு, அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு ஒலி, ஒளி கட்டமைப்பு, அகன்ற திரையுடன் கூடிய பயன்பாடு விழிப்புணர்வு வாகனங்கள் காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளது.

stalin

இவ்வாகனத்தில் நான்கு புறமும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனத்தின் சுற்றுப் பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை காணவும், அதனை பதிவு செய்யவும், தேவைப்படின் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு, பாதுகாப்பு பணியிலும் வாகனத்தை பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல் மட்டுமின்றி , சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளுக்கும், அவசர காலங்களில் நடமாடும் கட்டுப்பாட்டு அறை ஆக செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

cm stalin

இந்த விழிப்புணர்வு பணிகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் ,ஒன்று சென்னை பெருநகர காவல் ஆணையருக்கும், மற்றொன்று சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குனர் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.