நேற்று விவாதம் - இன்று திட்டம் ரத்து! அமைச்சர் ரமேஷ் அதிரடி

 
ரமேஷ்

நீலகிரி மாவட்டம், குன்னூரில் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி ரத்து செய்யப்பட்டுள்ளது.


2024- 2025 ஆம் ஆண்டு சட்டமன்ற மானியக் கோரிக்கையில் நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் மற்றும் நகர், அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம் மற்றும் நகரில் அமைந்துள்ள அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் அடுக்கு நிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணிக்கு ரூ.10.36 கோடிக்கு மருதமலை, அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் அடிப்படை வசதிகள் இல்லாத, வருவாய் குறைந்த அளவில் இருக்க கூடிய இந்த திருக்கோயிலுக்கு மருதமலை திருக்கோயில் உபரி நிதியில் இருந்து வட்டியுடன் கூடிய கடனை பெற்று இந்த வாகன நிறுத்துமிடம் அமைக்க கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து இத்திட்டம் துவங்கப்படாத சூழலில் இருப்பதை கருத்தில் கொண்டு இதன் கட்டுமான பணிகளுக்கான ஆணையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது.