திருப்பதி ஏழுமலையான் கோயிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்

 
ச் ச்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சௌத்ரி சாமி தரிசனம் செய்து வைத்து கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசீர்வாதம் செய்து வைத்தார். பின்னர் தேவஸ்தானத்தில் தற்பொழுது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் வளர்ச்சி பணிகள் குறித்து விவரித்தார்.