முதல்வரின் முகவரிக்கு வந்த மனுக்களுக்கு இனி வேகம் கூடும்- தமிழக அரசின் அதிரடி உத்தரவு
முதலமைச்சரின் இரண்டாம் செயலாளராக பணியாற்றும் ஜி. லட்சுமி பிரியா, 'முதல்வரின் முகவரி' துறையின் சிறப்பு அலுவலர் என்ற முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்வரின் முகவரி என்பது முதல்வரின் மிக முக்கியமான திட்டம். மக்கள் கொடுக்கும் மனுக்கள் நேரடியாக முதல்வரின் பார்வைக்கு செல்லும் துறை. இதுவரை வேறு துறையில் இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி இதை கூடுதலாக கவனித்து வந்தார். இப்போது முதல்வரின் அலுவலகத்திலேயே Secretary-II ஆக இருக்கும் லட்சுமி பிரியாவுக்கு முழு கூடுதல் பொறுப்பு கொடுத்ததன் மூலம், முதல்வரின் முகவரி துறையை முதல்வர் அலுவலகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.இதனால் மனுக்கள் மீதான நடவடிக்கை மிக வேகமாக இருக்கும்.
லட்சுமி பிரியா தற்போது Chief Minister's Office-ல் Secretary-II ஆக உள்ளார். முதல்வரின் தினசரி நிகழ்வுகள், கோப்புகளை கவனிப்பவர். அவரே முதல்வரின் முகவரியையும் கவனித்தால், ஒரே இடத்தில் இருந்து முடிவு எடுக்கும் வேகம் (Single Window Speed) அதிகரிக்கும் என்பதற்காக தமிழக அரசு இந்த மிகச் சிறப்பான நடவடிக்கையை எடுத்துள்ளது. முதல்வரின் முகவரி Special Officer பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தவர் அமுதா, IAS. கூட்டுறவுத்துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை என்பது பொது விநியோகம் (ரேஷன் கடை), விலைவாசி கட்டுப்பாடு போன்ற மிக பிசியான துறை. அந்த துறையின் முழு பணியுடன், முதல்வரின் முகவரி துறையையும் கூடுதலாக கவனிப்பது அவருக்கு பணிச்சுமை அதிகமாக இருந்ததால், அந்த பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தனது சொந்த துறையான கூட்டுறவு துறையில் தொடர்ந்து கவனம் செலுத்துவார்.

