ஐஐடி விடுதியில் Dettol குடித்து எம்டெக் மாணவி தற்கொலை முயற்சி

 
iit iit

சென்னை ஐஐடி விடுதியில் Dettol குடித்து எம்டெக் மாணவி தற்கொலை முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

suicide


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் ரெட்டி மகள் சிவகுமாரி( வயது 25). சென்னை ஐஐடியில் எம்டெக் படித்து வரும் சிவகுமாரி அதே வளாகத்தில் உள்ள சொர்ணமுகி விடுதியில் கடந்த நான்கு மாதங்களாக தங்கியுள்ளார். குடும்பத்தை விட்டு பிரிந்து விடுதியில் தங்கி படிப்பதால் சிவகுமாரி் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலை விடுதியில் உள்ள பாத்ரூமுக்கு சென்று அங்கிருந்த கிருமி நாசினியை எடுத்து குடித்துள்ளார். பிறகு தனது அறைக்கு வந்து தோழி சூர்யாவிடம், தான் கிருமி நாசினி குடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவகுமாரி அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். குடும்பத்தினரை பிரித்தது தான் காரணமா? அல்லது வேறு காரணங்கள் உள்ளதா ? என விசாரணை நடைபெறுகிறது.