செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் தோனி பங்கேற்பு?

 
dhoni

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MS Dhoni Fans Official on Twitter: "Recent click of MS Dhoni from Indian  Cricket Heroes award function😇 (PS Look at his Smile 😍) #DhoniAtCWC19  #CWC19 https://t.co/KlaPKmQR0g" / Twitter


44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28ஆம் தேதி சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. துவக்க நிகழ்ச்சியானது உலக அளவில் பெரிய வரவேற்பை பெற்றது .ஒலிம்பியாட் போட்டியினுடைய நிறைவு விழாவானது ஆகஸ்ட் 9 தேதி நடைபெற உள்ள நிலையில் , ஒலிம்பியாட் போட்டிக்கான நிறைவு விழா நிகழ்ச்சியானது டிஜிட்டல் மற்றும் OTT தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.டிஜிட்டல் மற்றும் OTT தளத்தில் ஒளிபரப்பு செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒப்பந்ததாரர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ள ஒப்பந்ததாரர்கள் ஒப்பந்தம் கோரலாம் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது