சென்னை வந்தடைந்தார் தோனி! கவனம் பெற்ற முககவசம்

 
தோனி

'இந்தியன் ஆர்மி' என ஆங்கிலத்தில் பெயர் பொறித்த முக கவசத்துடன் எம்.எஸ்.தோனி சென்னை வந்தடைந்தார். 

Image


2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது. பத்து அணிகள் பங்கேற்க உள்ள ஐபிஎல் போட்டியின் முதலாவது ஆட்டம் குஜராத்தில் நடைபெறுகிறது இதில்  சென்னை குஜராத் அணிகள் மோதுகின்றன. போட்டி தொடங்க இன்னும் 29  நாட்களே உள்ள நிலையில் பயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னை வர தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி சென்னை வந்தடைந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் பெயிரிட்ட T-shirt அணிந்தபடியும் 'Indian Army' என பெயர் பொறித்த முககவசம் அணிந்தபடியும் சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு  மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் அங்கிருந்த ரசிகர்கள் "தல தோனி, தல தோனி" என கூச்சலிட்டு உற்சாகமடைந்தனர்.