“விஜய் கூட்டத்தில் வாகன பதிவெண் இல்லாத ஆம்புலன்ஸ் வந்தது” - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

 
vijayabaskar

விஷச் சாராய மரணத்தின்போது முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Image


கரூர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “விஷச் சாராய மரணத்தின்போது முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்லாதது ஏன்? விஜய் பேச ஆரம்பித்தபோது விளக்குகள் அணைந்தன. செருப்பு வீசப்படுகிறது. காவல்துறை தடியடி நடத்துகிறது. இரவோடு இரவு வருவதையும் நிவாரணம் தருவதையும் முதல்வர் பெருமையாக கூறுகிறார். இதை செய்வதற்காகத்தான் அரசு உள்ளது. கரூர் சம்பவத்தின் உண்மைத் தன்மை தெரிய சிபிஐ விசாரிக்க வேண்டும்.

Image

விஜய் கூட்டத்தில் வாகன பதிவெண் இல்லாத ஆம்புலன்ஸ் வந்தது. அதைத்தான் எடப்பாடி பழனிசாமி கூறினார். பதிவெண் இல்லாத ஆம்புலன்ஸை தான் இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். 40 ஆம்புலன்ஸ் தயார் செய்து அதில் திமுக மருத்துவ அணி என அக்கட்சியினர் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். ஆம்புலன்ஸ்களை அரசால் தயார் செய்ய முடியாதா? இறப்பில் அரசியல் செய்ய வேண்டாம் என்னும் மா.சுப்பிரமணியனுக்கு இது தெரியாதா?” எனக் கேள்வி எழுப்பினார்.