தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும், வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?

 
venkatesan

தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா? என்று சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

tn
நடப்பாண்டுக்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்துடன் நேற்று  காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தின் தொடக்கத்திலேயே ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதையடுத்து திமுக அரசின் திட்டங்கள் குறித்து பேசிய ஆளுநர் திராவிடம் மாடல் என்ற வார்த்தையையும்,  பெரியார், அண்ணா ,கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் உரையின்போது வாசிக்காமல் தவிர்த்து விட்டார். இதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில் ஆளுநர் தானாக பேசிய கருத்துக்களை அவை குறிப்பிலிருந்து நீக்க  வேண்டும் என்று கூறி தீர்மானம் நிறைவேற்றினார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த ஆளுநர் சட்டப்பேரவை கூட்டத்துடன் முடிவதற்கு முன்பாகவே பேரவையிலிருந்து வெளியேறினார்இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் , "ஆளுநர் அழைப்பிதழ் கடந்த முறை வந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை இருந்தது. இந்த முறை வந்துள்ள அழைப்பிதழில் மூன்று இடங்களிலும் இந்திய அரசின் இலட்சினை மட்டுமே இருக்கிறது.


நமது இலட்சினையில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்த மறுத்துள்ளார். இதேபோல தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்திலிருந்தும் வாடகை வீட்டிலிருந்தும் ரோசப்பட்டு வெளியேறுவார் என்று எதிர்பார்க்கலாமா?  " என்று குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் மற்றொரு பதிவில், ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்”என்று இருக்கிறது. நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.