காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் பொறுப்பில் இருந்து எம்.பி. ரஞ்சன்குமார் விடுவிப்பு!

 
tn

காங்கிரஸ் மத்திய சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து எம்.பி.ரஞ்சன்குமார்  விடுவிக்கப்பட்டுள்ளார். 

tn
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  மத்தியசென்னை மேற்கு மாவட்டத் தலைவராக இருந்த திரு. எம்.பி. ரஞ்சன்குமார் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

tn

எனவே, அவருக்கு கீழ் பணியாற்றிய மாவட்ட, சர்க்கிள், வட்ட நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள், பிரிவுகள் மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகளும் தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மத்தியசென்னை மேற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.