எம்பி தேர்தல்- உதவியாளரை வேட்புமனு தாக்கல் செய்ய வைத்த ராமதாஸ்

 
ராமதாஸ்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் உதவியாளர் சாமிநாதன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட சுயேட்சையாக மனுதாக்கல் செய்தார். அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட காலையில் பா.ம.க. தலைவர் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட கடைசி 5 நிமிடங்களில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பில் அவரது உதவியாளர் சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாத காரணத்தால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ராஜ்யசபா தேர்தலில் மொத்தம் ஆறு சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ள நிலையில், அவர்களுடைய மனுக்கள் நிராகரிக்கப்படவுள்ளன.