இன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்கம் - ராமதாஸ்

பிறமொழி திணிப்பைத் தடுத்து அன்னை மொழியைக் காப்பதே நமது முதல் கடமை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், அன்னைத் தமிழைக் காக்க இன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்கம்
அன்னைத் தமிழைக் காக்க இன்னுயிர் ஈந்த
— Dr S RAMADOSS (@drramadoss) January 25, 2024
மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்கம்
இந்தித் திணிப்பு என்ற ஒடுக்குமுறையிலிருந்து தாய் மொழியாம் தமிழைக் காக்க இன்னுயிரை ஈந்த கீழப்பழுவூர் சின்னசாமி, விருகை அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், சிதம்பரம் இராஜேந்திரன் உள்ளிட்ட மொழிப்போர்…
இந்தித் திணிப்பு என்ற ஒடுக்குமுறையிலிருந்து தாய் மொழியாம் தமிழைக் காக்க இன்னுயிரை ஈந்த கீழப்பழுவூர் சின்னசாமி, விருகை அரங்கநாதன், கோடம்பாக்கம் சிவலிங்கம், சிதம்பரம் இராஜேந்திரன் உள்ளிட்ட மொழிப்போர் ஈகியர்கள் அனைவருக்கும் வீர வணக்கம். பிறமொழி திணிப்பைத் தடுத்து அன்னை மொழியைக் காப்பதே நமது முதல் கடமை. அன்னைத் தமிழைக் காக்க என்றும், எத்தகையத் தியாகத்திற்கும் அணியமாக இருப்போம்! என்று குறிப்பிட்டுள்ளார்.