"மொழிப்போர்த் தியாகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கை உரம் ஊட்டுவோம்" - முதல்வர் ஸ்டாலின்

 
tn

தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் கழகத்தின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில், இந்தித் திணிப்புக்கு எதிராகத் தம் இன்னுயிரை ஈந்து உயிரனைய தமிழ்மொழியின் உரிமை காத்த மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் இன்று!

tn

பேரறிஞர் பெருந்தகையின் பெயரால் அமைந்த சென்னை அண்ணா நகரில் நடைபெறும் வீரவணக்கப் பொதுக்கூட்டத்தில் நான் உரையாற்றுகிறேன். 

தமிழ்நாடு முழுவதும் 141 இடங்களில் கழகத்தின் சார்பில் மொழிப்போர்த் தியாகிகள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.


அனைவரும் திரளாகக் கூடிடுவோம்! மொழிப்போர்த் தியாகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கை உரம் ஊட்டுவோம்!என்று குறிப்பிட்டுள்ளார்.