"மொழிப் போராளிகளின் தியாகம் என்றென்றும் போற்றத்தக்கது" - ஈபிஎஸ், ஓபிஎஸ் ட்வீட்
உயிர்நீத்த தன்னலமற்ற மொழிப்போர் தியாகிகளான மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள் என்று ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில், இந்தி மொழி திணிப்புக்கு எதிராக வெகுண்டெழுந்து மாபெரும் எதிர்க் குரல்களாகத் தமிழ் மண்ணில் ஒலித்து, “தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்” என்பதை மெய்ப்பிக்கும் விதமாக மாபெரும் போராட்டங்கள் நடத்தி, செம்மார்ந்த மொழியான தாய் தமிழைக் காக்க உயிர்நீத்த தன்னலமற்ற மொழிப்போர் தியாகிகளான மாவீரர்களுக்கு எனது வீரவணக்கங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மொழியை காப்பதற்காக, இந்தி திணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்த மொழிப் போர் தியாகிகளுக்கு எனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) January 25, 2024
அன்னை தமிழக்காக இன்னுயிரை நீத்த மொழிப் போராளிகளின் தியாகம் என்றென்றும் போற்றத்தக்கது. pic.twitter.com/6PUPgDANrP
அதேபோல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , தமிழ் மொழியை காப்பதற்காக, இந்தி திணிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு உயிரிழந்த மொழிப் போர் தியாகிகளுக்கு எனது வீர வணக்கத்தைச் செலுத்துகிறேன்.
அன்னை தமிழக்காக இன்னுயிரை நீத்த மொழிப் போராளிகளின் தியாகம் என்றென்றும் போற்றத்தக்கது.என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.