"ரூ.3,440 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்" - முதல்வர் ஸ்டாலின் தகவல்!!

 
tn

10 நாள் பயணமாக கடந்த 27ல் ஸ்பெயின் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

tn

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் , முதலீடுகளை ஈர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஸ்பெயின் பயணம் சிறப்பாக அமைந்தது. ஸ்பெயின் பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது.  எனது வெளிநாட்டுப் பயணம் சாதனைப் பயணமாக அமைந்துள்ளது.  தமிழ்நாட்டிற்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறேன் முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள வாய்ப்புகளை ஸ்பெயின் மாநாட்டில் எடுத்துரைத்தேன். ரோக்கா, ஹபக் லார்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.ஸ்பெயினில் வசிக்கும் தமிழர்களையும் நான் சந்தித்தேன். ஸ்பெயின் பயணத்தின் மூலம் 3440 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

tn

பிரதமர் மோடியின் நாடாளுமன்ற பேச்சை பார்த்தேன், ரசித்தேன், சிரித்தேன். காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி போலவும், பாஜக எதிர்க்கட்சி போலவும் அவர் பேசியிருக்கிறார் என்றார்.