லண்டனில் ரூ.12,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து- தவெக

 
லண்டனில் ரூ.12,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து- தவெக

முதலீடுகளை ஈர்க்கும் மாண்புமிகு முதலமைச்சரின் இங்கிலாந்து பயணத்தில், முக்கிய சந்திப்புகளின் விளைவாக, இன்று சுமார் 9,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரூ.12,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்னணி நிறுவனங்களுடன் கையெழுத்தாகியுள்ளதாக தவெக கூறியுள்ளது.


இதுகுறித்து தவெக ஐடி விங் தனது எக்ஸ் தளத்தில், “முதலீடுகளை ஈர்க்கும் மாண்புமிகு முதலமைச்சரின் இங்கிலாந்து பயணத்தில், முக்கிய சந்திப்புகளின் விளைவாக, இன்று சுமார் 9,400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ரூ.12,300 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முன்னணி நிறுவனங்களுடன் கையெழுத்தாகியுள்ளன. தவெக அரசின் ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தின் மீது தொழில் நிறுவனங்களுக்கு உருவாகியுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடே இந்தப் புதிய ஒப்பந்தங்கள்.

முந்தைய திமுக ஆட்சியில் முதலீடுகளை ஈர்த்ததாக அறிவிப்புகள் மட்டுமே வெளியான நிலையில், முதலீடுகளின் பட்டியலைக் கேட்டால் வெற்றுத் தாளே விடையாகக் கிடைத்தது. ஆனால், வெளிப்படையான மற்றும் ஊழலற்ற வெற்றித் தலைவரின் நிர்வாகம், தமிழ்நாட்டின் மீது தொழில் நிறுவனங்களின் நம்பிக்கையை அதிகரித்து வருகிறது. முதலீடு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என தமிழ்நாடு வளர்ச்சிக்கான வெற்றிப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது!” எனக் குறிப்பிட்டுள்ளது.