வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! சென்னையில் மேம்பாலங்கள் மூடல்..!

 
1 1

சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை தற்காலிகமாக மூடப்படும். வாகன ஓட்டிகள் தரைத்தள சாலைகளையே பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடையாறு பகுதி: அடையாறில் இருந்து காமராஜர் சாலை செல்ல வேண்டிய வாகனங்கள், கிரீன்வேஸ் சாலை மற்றும் தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்படும். இவை மந்தைவெளி மற்றும் லஸ் சந்திப்பு வழியாக மயிலாப்பூர் நோக்கிச் செல்லலாம்.

ஆர்.கே. சாலை: டாக்டர் ஆர்.கே. சாலையில் இருந்து வருபவர்கள் வி.எம். தெரு சந்திப்பில் திருப்பி விடப்பட்டு, சாந்தோம் சாலை வழியாக கிரீன்வேஸ் சாலையை அடையலாம்.

பாரிஸ் & வடக்கு சென்னை: பாரிஸ் சந்திப்பில் இருந்து வருபவர்கள் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, முத்துசாமி பாலம் மற்றும் அண்ணா சாலை வழியாக தங்கள் பயணத்தைத் தொடரலாம்.

வாலாஜா சாலை: வாலாஜா சந்திப்பில் இருந்து காமராஜர் சாலை நோக்கிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி இல்லை. இதேபோல், கொடி மரச் சாலையில் இரவு 8 மணி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.

பேருந்துகளுக்கான அறிவிப்பு:

கிரீன்வேஸ் சாலையில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்துகள், ஆர்.கே. மடம் சாலையில் உள்ள 'U' திருப்பத்தில் திரும்பி, திருவேங்கடம் தெரு வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விபத்துகளைத் தவிர்க்கவும், சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் பொதுமக்கள் இந்த கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.