வாகன ஓட்டிகள் உஷார்..! நள்ளிரவில் அமுலுக்கு வந்த கட்டண உயர்வு..!

 
1

நாடு முழுவதும் ஏப்ரல் 1ம் தேதி சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 60 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தல் உள்ள 60 சங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள 77 சுங்கச்சாவடிகளில் 66 சுங்கச்சாவடிகளில் கட்டணம் இந்த உயர்வு அமுலுக்கு வந்துள்ளது. புதிய விலை உயர்வின்படி கார்கள், ஜீப்புக்ள, வேன்கள் வழக்கமான கட்டணத்தை விட ரூ.10 முதல் ரூ.40 வரை கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். 

மேலும், லாரிகள், பேருந்துகள் போன்ற கனரக வாகனங்கள் ரூ.50 முதல் ரூ.200 வரை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.  இந்த விலை உயர்வு மாதாந்திர பயண அட்டைக்கும் பொருந்தும். அதாவது, மாதாந்திர அட்டை கட்டணம் ரூ.300லிருந்து ரூ.350 ஆகவும்  செலுத்த வேண்டியிருக்கும்.  

வருடாந்திர அட்டைக்கான கட்டணம் ரூ.3,000லிருந்து, ரூ.3075 ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அத்தியாவசிய பொருட்களின் விலைகள் ஏற்கனவே உயர்ந்து வரும் நிலையில், இந்த சுங்கக் கட்டணம் உயர்வு  வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் நதிச் சுமையை ஏற்படுத்தும். மேலும், லாரி உரிமையாளர்கள் தங்களது வாடகையும் உயர்த்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

28 டோல்களுக்கு புதிய தொகை :

தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உள்ள பரனூர், சூரப்பட்டு, வானகரம் போன்ற சுங்கச்சாவடிகள் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது.  திண்டிவனம், ஆத்தூர், கணியூர், கப்பலூர், கீழ்க்குப்பம், கிருஷ்ணகிரி, மாத்தூர், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புதூர், பரனூர், திருப்பாச்சேத்தி, வானகரம், விராலிமலை, வாணியம்பாடி உள்ளிட்ட சுங்கக் சாவடிகளின் கட்டண உயர்வு அமுலுக்கு வருகிறது.