வாகன ஓட்டிகளே உஷார்..! இனி ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களை வணிக பயன்பாட்டிற்கு ஈடுபடுத்தினால் பறிமுதல் செய்யப்படும்..!
போக்குவரத்து ஆணையர் கிரண் குராலா வெளியிட்டுள்ள உத்தரவு:
ரேபிடோ, ஊபர் மற்றும் போர்ட்டர் செயலிகளில், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில், சரக்குகளை ஏற்றி செல்லும் வாகனங்களாக பயன்படுத்துவதாக, ஓட்டுநர்கள் சங்கங்கள் வாயிலாக புகார் பெறப்பட்டுள்ளது.
எனவே, இது தொடர்பாக, அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில், சோதனை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். திடீர் சோதனை நடத்தும் போது, சம்பந்தப்பட்ட செயலிகள் வாயிலாக இயக்கப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். மேலும், வாகன விபரங்களை, போக்குவரத்து ஆணையரக அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், 'ஊபர், ரேபிடோ, போர்ட்டர் செயலிகளில், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில், சரக்குகளை எடுத்து செல்ல, பதிவு செய்யும் வசதியை நீக்க வேண்டும்' என, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, போக்குவரத்து ஆணையர் கிரண் குராலா, நேற்று கடிதம் அனுப்பி உள்ளார்.

