வாகன ஓட்டிகள் ஷாக்..! தமிழகத்தில் ஒரே நேரத்தில் 7,000 பெட்ரோல் பங்க்குகள் மூடப்படும் அபாயம்..!
தமிழகம் முழுவதும் உள்ள 7,000 பெட்ரோல் நிலையங்களை மூடி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் சூழல் உருவாகி உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.
தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளதாவது,
அவ்வபோது நடக்கும் குற்றச்சம்பவங்கள் தொடர்பாக சிசிடிவி பதிவுகளை பெறும்போது பெட்ரோல் நிலையங்களில் ஒட்டுமொத்த DVR உபகரணங்களையும் பறிமுதல் செய்வதை காவல்துறை பறிமுதல் செய்கிறது. இந்த போக்கை காவல்துறை கைவிட வேண்டும்.மேலும், குற்றச்சம்பவங்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகளுக்கு பென்டிரைவ் அல்லது ஹார்ட் டிஸ்க்கள் மூலம் நகலெடுத்து பயன்படுத்துவதை மட்டுமே உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் அறிவித்துள்ளனர்.
குற்ற வழக்குகள் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றும் போது இத்தகைய உத்தரவுகளை வழங்க கோரி தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது .கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றால் விரைவில் தமிழகம் முழுவதும் 7000 பெட்ரோல் நிலையங்கள் தன்னிச்சையாக கடையடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மேற்காசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக உலகம் முழுக்க மக்கள் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாது கடந்த சில நாட்களில் மட்டும் 6 முறைக்கு மேலாக தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது .
இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஹோட்டல் உணவு பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில், 7000 பெட்ரோல் நிலையங்கள் ஒரே நேரத்தில் கடையடைப்பில் ஈடுபட்டால், சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

