வாகன ஓட்டிகள் ஷாக்..!! 3-வது முறையாக உயர்ந்த பெட்ரோல், டீசல், சி.என்.ஜி விலை..!!
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல், டீசல் விலையானது தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
மே 15 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்ந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்குள் மீண்டும் 90 பைசா அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை 87 பைசா உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் ரூ. 105.31-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் டீசல் விலையும் 91 பைசா உயர்ந்து ஒரு லிட்டர் ரூ. 96.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 15 ஆம் தேதி சென்னையில், பெட்ரோல் விலை 82 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 104.49-க்கும், டீசல் விலை 86 பைசா அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 96.11-க்கும் விற்பனை செய்யப்பட்டது. முன்னதாக, 15 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.83 அதிகரித்து, ரூ. 103.67-க்கும், பெட்ரோல் விலை ரூ. 2.86 அதிகரித்து ஒரு லிட்டர் ரூ. 95.25-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் 10 நாட்களுக்குள் இன்று மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை போன்றே இன்று சி.என்.ஜி விலையும் கிலோவுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

