வாகன ஓட்டிகள் ஷாக்..!! மீண்டும் உயர்ந்த சிஎன்ஜி விலை..!! 11 நாள்களில் 4-வது முறை!!
ஈரான் போர் பதற்றத்தாலும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆட்டோ மற்றும் கார்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது.
கடந்த 11 நாட்களில் சிஎன்ஜி எரிவாயு விலை 4வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த மே 15 ஆம் தேதியிலிருந்து பெட்ரோல், டீசல் விலை 5 முறை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வாகன எரிபொருள்களில் ஒன்றான சிஎன்ஜியும் விலையும் அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கலக்கமடைந்துள்ளனர்.
சென்னையில் சிஎன்ஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.91.50-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.2 உயர்ந்து ரூ.93.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார் பயனாளர்கள் பலரும் சிஎன்ஜி எரிவாயு பயன்படுத்தி வரும் நிலையில், இந்த விலை உயர்வு அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்புவரை சிஎன்ஜி தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் இருந்தது. போர் பதற்றம் காரணமாக இந்த நிலை இருந்தது. தற்போது சிஎன்ஜி தட்டுப்பாடு நீங்கிய நிலையில், விலை உயர்த்தபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

