அன்னையர் தினம்: முதல்வர் ஸ்டாலின் , கனிமொழி எம்.பி., வாழ்த்து..

 
mk stalin


அன்னையர் தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

உலகம் முழுவதும் இன்று ( மே 14) அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைவர்கள் , பிரபலங்கள் பலரும் அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்தவகையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடலுக்குள் இன்னொரு உயிராய் நம்மைச் சுமந்து, உயிருக்கும் மேலாய் அன்பு செலுத்திடும் அன்னையர் அனைவருக்கும்  அன்னையர் தின வாழ்த்துகள்! அன்பினால் அவனியை நிறைக்கும் தாயின் எதிர்பார்ப்புகளையும் விருப்பங்களையும் மதிப்போம், நிறைவேற்றுவோம்!” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


அதேபோல், திமுக மகளிரணி செயலாளரும், எம்.பியுமான கனிமொழி  தனது ட்விட்டர் பக்கத்தில், “அம்மாக்களின் அளவிட முடியாத அன்பாலும், அசைத்திட முடியாத மனவலிமையாலும் இயங்கிக் கொண்டிருக்கிறது இவ்வுலகம்! அன்னையர் நாள் வாழ்த்துகள்.” எனக்குறிப்பிட்டு தனது பெற்றோரான கலைஞர் மற்றும் ராஜாத்தி அம்மாள் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.