குடும்பத்துடன் குடித்துவிட்டு மட்டை! மாமியார், மருமகன் பலி

 
kudi

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அளவுக்கு அதிகமாகு மத குடித்ததால் மாமியார், மருமகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பெருக்கரணை என்ற கிராமத்தில் குளக்கரையில் வசித்து வருகின்றனர் இருளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். இவர்கள் விறகுவெட்டும் கூலிவேலை செய்துவருகின்றனர். 

இந்நிலையில் வசந்தா (வயது 40), சின்னத்தம்பி (வயது 30), அஞ்சலி (வயது 22) ஆகிய மூன்று பேரும் இன்று அளவுக்கு அதிகமாக மது அருந்தி உள்ளனர். இவர்களில் வசந்தா சின்னத்தம்பியின் மாமியார்.  இவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் சம்பவ இடத்தில் பலியானார்கள். சின்னதம்பியின் மனைவியும் வசந்தாவின் மகளுமான அஞ்சலி (22) மட்டும்  கவலைக்கிடமான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு உள்ளார். இவரும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  சித்தாமூர் போலீசார், பிரேதத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் அருந்தியது அரசு மதுபானமா? இல்லை கள்ள சாராயமா? என போலீசார் விசாரணை செய்கின்றனர்.