ஒன்றரை வயது மகன் கண் முன்னே தாய் தூக்கிட்டு தற்கொலை

 
suicide

சென்னை கொருக்குப்பேட்டையில்  காதல் திருமணம் செய்து கொண்டு 2 குழந்தைகளுடன் வாழ்ந்து  27 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

suicide

கொருக்குப்பேட்டை பகுதியில் புகைப்பட கலைஞர் ரகு என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு  பிரியங்கா என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகனும் ஒன்றரை வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவர் ரகுபதி கொருக்குப்பேட்டை ஆறுமுகம் தெருவில் போட்டோஷாப் கடை  வைத்துள்ளார். ரகுபதி போதை மாத்திரைக்கு அடிமையானதால் அடிக்கடி இவர்களுக்குள் பிரச்சனை வந்துள்ளது. போதை மாத்திரை தொடர்பாக நேற்று மறுபடியும் பிரச்சினை ஏற்பட்ட நிலையில், 4 வயது குழந்தை வெளியே 
அழுகும் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கொருக்குப்பேட்டை போலீசார், வீட்டுக்குள் சென்று பார்த்த பொழுது கதவு திறந்த நிலையிலும் பிரியங்காவின்  கணவர் ரகு போதை மாத்திரை கொண்டு தூங்கிய நிலையிலும் இருந்துள்ளார். அப்போது பிரியங்கா அறையில் மின்விசிறியில் தனக்கு தானே புடவையால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து போலீசார் பிரியங்காவின் உடலை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதல் கணவன் போதை மாத்திரைக்கு அடிமையானதால் மனைவி தனது இரு குழந்தைகளையும் தவிக்கவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது