"குட்டியை காப்பாற்ற தாய் யானையின் போராட்டம்!" – வயநாட்டில் நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்!
வயநாடு மாவட்டம், காட்டிக்குளம் பகுதியில் திடீரென ஏற்பட்ட மலைச்சரிவில் சிக்கி உருண்டு விழுந்த குட்டியானை உயிரிப்பு.குட்டியை காப்பாற்ற தாய் யானை பதற்றத்துடன் முயற்சித்த சிசிடிவி பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் காட்டிக்குளம் (Kattikkulam) அருகே உள்ள முத்துமாரி (Muthumari) பகுதியில், மலைச்சரிவிலிருந்து குட்டியானை ஒன்று தவறி கீழே உருண்டு விழுந்து உயிரிழந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில், தாயுடன் சென்ற குட்டியானை குத்தான மலைச்சரிவிலிருந்து கீழே நழுவி உருண்டு விழுந்தது.குட்டியை காப்பாற்ற தாய் யானை மற்றும் மற்றொரு காட்டு யானை கடுமையாகப் போராடிய காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகின. அந்த நெகிழ்ச்சியான மற்றும் சோகமான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன
குட்டியைச் சுற்றி யானைக்கூட்டம் பாதுகாப்பாக நின்றதால், வனத்துறையினரும் விரைவுப் படை வீரர்களும் உடனடியாக அருகில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் யானைக்கூட்டம் வனப்பகுதிக்குள் துரத்திவிடப்பட்டு, இறந்த குட்டியானையின் உடல் வனத்துறையினரால் காடுகளுக்குள் அடக்கம் செய்யப்பட்டது.
#Keralam வயநாடு மாவட்டம் காட்டிக்குளம் பகுதியில் மலைச்சரிவில் இருந்து உருண்டு விழுந்து குட்டி யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது . தாய் யானையுடன் வந்த அந்த குட்டி யானை தவறி விழுந்ததும், அதைத் காப்பாற்ற தாய் யானை பதற்றத்துடன் முயற்சி செய்யும் நெஞ்சை உருக்கும் #CCTV காட்சி.. https://t.co/r7nshFML0c
— M.M.NEWS உடனடி செய்திகள் (@rajtweets10) October 26, 2026