குழந்தையின் கழுத்தை அறுத்து தாயும் தற்கொலை

சென்னை தேனாம்பேட்டையில் குழந்தையின் கழுத்தை அறுத்துவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டை வெங்கட்ராமன் தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் சினிமா துறையில் தொழில்நுட்டபனராக பணியாற்றி வருகிறார். சரவணனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெயந்தி என்பவருடன் திருமணம் நடைப்பெற்றது. சரவணன் - ஜெயந்தி தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த சில தினங்களாக ஜெயந்தி மன உளைச்சலில் இருந்து வந்தாக கூறப்படுகிறது. இன்று கணவர் சரவணன் பணிக்குச் சென்றதும், குழந்தைகளுடன் வீட்டுக்குள் தாழிட்டுக்கொண்டு, ஜெயந்தி தனது எட்டு வயது குழந்தையை கழுத்தை அறுத்துவிட்டு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டார். தொடர்ந்து அருகில் இருந்த 200 லிட்டர் கொண்ட டிரம்மில் தலையை உள்ளோ வைத்து கொண்டுள்ளார். இதில் மூச்சு நிணறல் ஏற்பட்டு ஜெயந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
எட்டு வயது பெண் குழந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட ஜெயந்தியின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் காயமடைந்த எட்டு வயது சிறுமியின் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் குழந்தையை கழுத்தை அறுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது