2 பச்சிளம் குழந்தையுடன் தாய் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

 
suicide

நீடாமங்கலம் அருகே  இரண்டு பச்சிளம் குழந்தையுடன் தாய் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரு குழந்தை உயிர் தப்பியது

கிருஷ்ணகிரி......தாய், 2 குழந்தை ரயிலில் பாய்ந்து தற்கொலை | Etamilnews.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ஆதனூர் புதிய ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த மகாலிங்கம் - பூமி தம்பதியரின் மகன் சர்க்குணம். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நீடாமங்கலம் வடக்கு மடவளாகம் பகுதியை சேர்ந்த சத்யா  (25) என்ற பெண்ணை காதலித்து முறைபடி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரே பிரசவத்தில் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தது. இந்த நிலையில் தனது தாய் பூமியிடம் இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியை விட்டு விட்டு வெளி மாநிலத்திற்கு வேலைக்கு சர்குணம் சென்றுள்ளார். இன்று மாமியார் பூமி வெளியூர் சென்று விட்டார்.  அந்த நேரம் பார்த்து சத்யா தனது இரண்டு ஆண் குழந்தைகளையும் தூக்கி கொண்டு ஆதனூர் சாமந்தான் கரை அருகில் உள்ள ரயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றுள்ளார். 

அப்போது சுமார் மதியம் 3.30 மணிக்கு காரைக்காலிலிருந்து திருச்சிக்கு சென்ற பயணிகள் ரயிலில் இரண்டு குழந்தைகளுடன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில் ஒரு குழந்தையை ரயில் கார்டு எடுத்து சென்று தஞ்சாவூரில் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த ரயில்வே காவல்துறையினர் தாய் சத்யா மற்றும் ஒரு குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருமணமாகி இரண்டு வருடம் என்பதால் மன்னார்குடி ஆர்.டி.ஓ,விசாரனைக்கு அனுப்பப்படும் என ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர். 

இது குறித்து  தஞ்சாவூர் ரயில்வே காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். தாய் குழந்தையுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது  .