2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை
செங்கம் அருகே குடும்ப பிரச்சனையில் இரண்டு ஆண் குழந்தையுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி கெளரி என்பவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூலையில் கூலி வேலை பார்த்து வருவதாக கூறப்படும் நிலையில் வெங்கடேசன் தினமும் குடித்துவிட்டு மது போதையில் வீட்டிற்கு வருவதால் கணவன் மனைவிக்கு இடையே அடிகடிக்கு சண்டை ஏற்பட்டு வருவதால் மனமுடைந்த கெளரி தனது இரண்டு ஆண் குழைந்தை கிஷோர் (5) தேவேஷ் (4) ஆகியோருடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கம் காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் மூவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். குடும்ப பிரச்சனையில் 2 மகனுடன் தாய் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


