2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை முயற்சி- குழந்தைகள் பலி

 
கிணற்றில் குதித்து தற்கொலை

தியாகதுருகம் அருகே குடும்ப பிரச்சனையில் கிணற்றில் தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் குதித்து தற்கொலைக்கு முயற்சித்ததில் இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

Suicide | கிணற்றில் குதித்து என்ஜினீயர் தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பீளமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி நான்கு வருடம் ஆகிறது. இவர்களுக்கு தமிழ் யாழினி (3) மற்றும் சஜித் (1) என்ற வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தேவேந்திரனுக்கும் சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் சரண்யா நேற்று தனது தாய் வீடான தியாகதுருகம் அருகே உள்ள வடதொரசலூர் கிராமத்தில் வந்து தங்கி உள்ளார். 

தொடர் குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த சரண்யா வடதொரசலூர் ஏரிக்கரைக்கு அருகே உள்ள கிணற்றில் தனது இரண்டு குழந்தைகளுடன் கிணற்றில் குதித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தியாகதுருகம் தீயணைப்பு மீட்பு குழுவினர் நேற்று இரவு முழுவதும் கிணற்றில் மூன்று பேரின் உடலை தேடியுள்ளனர். தண்ணீர் அதிகம் இருந்ததால் மீட்பு குழுவினருக்கு பெரும் போராட்டமாக இருந்தது. மேலும் நீர்மூழ்கி மோட்டார் வைத்து கிணற்றில் இருந்த நீரை வயல்வெளிகளில் வெளியேற்றினர். இரவு ஆரம்பித்த தேடுதல் பணி சுமார் 10 மணி நேரத்திற்கு பிறகு இரண்டு குழந்தைகளின் உடலை மட்டும் சடலமாக மீட்டனர்.

பின்னர் சரண்யா கிணற்றுக்கு அருகே உள்ள ஏரிக்கரை பகுதியில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரைப் பார்த்த பொதுமக்கள் அவரை எழுப்பி விசாரித்தனர். விசாரணையில்  சரண்யாவுக்கு நீச்சல் தெரிந்ததால் அவரால் தண்ணீரில் மூழ்க முடியவில்லை எனவும்  சரண்யா கிணற்றுக்கு மேலே வந்து அருகிலுள்ள ஏரி தண்ணீரிலும் மூழ்கி தற்கொலை  முயற்சி செய்துள்ளார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் இரண்டு உடல்களையும் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இரண்டு குழந்தைகள் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.