“யார் காப்பாற்றினாலும் பிழைக்கக்கூடாது”- விஷமருந்தி, குழந்தை இடுப்பில் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்த தாய்!

 
கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்.. கிணற்றில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்..

அரியலூரில் தாய் மற்றும் குழந்தை விஷம் அருந்தி தண்ணீரில் முழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Death

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே புங்கங்குழி - ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுபதி (35). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாண்டி லெட்சுமி (33) மகன்கள். கவிலேஷ் (3) லோகேஷ் ( 7)  ரகுபதி பல ஆண்டுகளாக திருப்பூரில் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அங்கு தன்னோடு வேலை பார்த்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டி லெட்சுமியை காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார். ரகுபதியும் பாண்டி லெட்சுமியும் அடிக்கடி திருப்பூருக்கு சென்றுவேலை பார்த்துவிட்டு மீண்டும் ஆதனூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரகுபதி திருப்பூருக்கு போகவில்லை. ஆனால் பாண்டி லெட்சுமி மட்டும் தீபாவளி பண்டிகை முடிந்த பின்பு தனது இரண்டு மகன்களையும் அழைத்துக் கொண்டு திருப்பூருக்கு சென்று வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை திருப்பூரில் இருந்து ஆதனூருக்கு புறப்பட்டு வந்த பாண்டி லெட்சுமி, இடையில் அம்பலவர் கட்டளை கிராமத்தில் பேருந்தில் இருந்து இறங்கிபேருந்து நிலையம் அருகே உள்ள கீழக்கொட்டேரியில் தனது மூத்த மகன் லோகேஷை ஏரிக்கரையில் நிற்க வைத்து விட்டு பாண்டிய லெட்சுமி தனது இளைய மகன் கவிலேஷை துப்பட்டாவால் தனது இடையில் இறுக்கி கட்டிக் கொண்டு ஏரியில் விழுந்துள்ளார். இதனைப் பார்த்து  மூத்த மகன் லோகேஷை கதறி அழுத்துள்ளார். லோகேஷ் அழுவதை கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது பாண்டி லெட்சுமியும், கவிலேஷும் இருவரும் தண்ணீரில் மிதந்துள்ளனர். பின்பு இருவரையும் ஏரியில் இருந்து மீட்டு பார்த்தபோது இருவரும் இறந்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் பாண்டி லெட்சுமி கமலேஷ் இருவரையும் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர்  கார்த்திகேயன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்.