#BREAKING சென்னையில் அதிர்ச்சி! ஓமந்தூரார் மருத்துவமனையில் கான்கிரீட் இடிந்து விழுந்து தாய், மகள் படுகாயம்
Jun 18, 2026, 20:54 IST1781796270635
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து இருவர் படுகாயம் அடைந்தனர்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் நுழைவாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்து தாய், 7 வயது சிறுமி படுகாயமடைந்தனர். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கணவரை பார்க்க வந்த மனைவி, மகள் மீது நுழைவு வாயிலின் கான்கிரீட் இடிந்து விழுந்தது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். தலையில் காயமடைந்த சத்யா அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 7 வயது மகள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.

