காலையிலேயே பரபரப்பு..!! செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு..!!

 
Q

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடு, டிரான்ஸ்பார்மர்கள் வாங்கியதில் ரூ.397 கோடி முறைகே உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தற்போது, தவெக அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியது தொடர்பான விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கரூர் ராமேஸ்வரப்பட்டியில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது.

செந்தில் பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி மற்றும் பாஸ்கரன் உள்பட அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, கரூர் தொழில்பேட்டையில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் ஆகிய இடங்களிலும் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

இதனால், கரூரில் பரபரப்பு நிலவி வருகிறது.