221 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு அதிக வாக்கு!

 
stalin

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதியையும் சேர்த்து 40 க்கு 40 வெற்றி பெற வைத்திருக்கிற தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி. ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் முழு அளவில் மோடி எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

dmk

இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகளை கைப்பற்றிய திமுக கூட்டணி, சட்டமன்ற தொகுதி வாரியாக பார்க்கும்போது 221 தொகுதிகளில் முதலிடம் பெற்றுள்ளது.  அதிமுக 8, பாமக 3, தேமுதிக 2ல் அதிக வாக்கு பெற்றுள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் ஒன்றில் கூட பாஜக அதிக வாக்குகளைப் பெறவில்லை.

dmk

தென் சென்னை உள்ளிட்ட 32 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்ட 192 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணியே அதிக வாக்குகளை பெற்றுள்ளது.  அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் மேற்கு மண்டல சட்டமன்ற தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதன் மூலம் அதிமுக வாக்கு வங்கி குறைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.