தவெக மாநாடு நடந்த பகுதியில் வழக்கத்தைவிட ரூ.1 கோடிக்கு மேல் மதுவிற்பனை அதிகரிப்பு
தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெற்ற நாளில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி இரு மாவட்டங்களில் 5 கோடியே 75 லட்சத்து 76 ஆயிரத்து 830 ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.

தமிழக வெற்றிக்கழக மாநாடு கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் ஞாயிற்று கிழமை நடைபெற்றது. அன்றைய தினத்தில் கன்னியாகுமார், தூத்துக்குடி, திருப்பூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளாமான தவெக நிர்வாகிகள் வி.சாலை பகுதிக்கு வாகனங்கள் மூலம் வருகை புரிந்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்ட நிலையில் மது கடைகளில் அமோகமாக மது விற்பனை நடைபெற்றுள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டும் 195 மதுபானக்கடைகள் செயல்படு வருகின்றன. இந்த கடைகளில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடைபெற்ற நாளில் மட்டும் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகளில் மொத்தமாக 5 கோடியே 75 லட்சத்து 76 ஆயிரத்து 830 ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. மாநாடு நடைபெற்ற அன்றைய தினம் மட்டும் 1 கோடியே 63 லட்சத்து 2ஆயிரத்து 190 ரூபாய்க்கு மது விற்பனை கூடுதலாக விற்பனை ஆகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள 86 மதுபான கடைகளில் 27 ஆம் தேதி 2 கோடியே 51 லட்சத்து 90 ஆயிரத்து 300-க்கு விற்பனை ஆகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 109 கடைகளில் 27 ஆம் தேதி 3 கோடியே 23 லட்சத்து 86 ஆயிரத்து 530 க்கு விற்பனை ஆகியுள்ளது. எப்பொழுதுமே இரு மாவட்டங்களிலும் 4.50 கோடிக்கு மட்டுமே மது விற்பனையான நடைபெறும் மாநாட்டினை முன்னிட்டு கூடுதலாக மதுவிற்பனையானது ஆகியுள்ளது. கடந்த 26-ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் 2 கோடியே 39 லட்சத்து 23 ஆயிரத்து 190 க்கு மது விற்பனையானகி இருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் 26 ஆம் தேதி 2 கோடியே 30 லட்சத்து 21 ஆயிரத்து 520 ருபாய்க்கு விற்பனை ஆகி இருந்தது குறிப்பிடதக்கது.


