66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பு

 
tn

தமிழகம் முழுவதும் 66 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் வேலை வாய்ப்பிற்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து சுமார் 66 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளது. இதில் ஆண்கள் 31 லட்சத்து 7,600 என்றும் , பெண்கள் 35 லட்சத்து 77 ஆயிரத்து 671 என்றும்,  திருநங்கைகள் 266 என்றும் மொத்தமாக 66 லட்சத்து 85 ஆயிரத்து 537 பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து காத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

jobs

இதில் 18 வயதுக்கு கீழானவர்கள் 17 லட்சத்து 65 ஆயிரத்து 888 என்றும்,  19லிருந்து 30 வயதுக்குள்ளானவர்கள் 28 லட்சத்து 43 ஆயிரத்து 792 என்றும்,  31லிருந்து 45 வயதுக்குள்ளானவர்கள் 18 லட்சத்து 32, 990 என்றும்,  46 முதல் 60 வயதுக்குள்ளானவர்கள் 2 லட்சத்து 36 ஆயிரத்து 756 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 60 வயதுக்கு மேலானவர்கள் 611 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

tn

அத்துடன் மாற்றுத்திறனாளிகள் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 358 பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இதில் 97 ஆயிரத்து 369 ஆண்களும் 48,989 பெண்களும் அடங்குவர்.