பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்..

 
Application Form

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர 1 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.  

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 8ம் தேதி அறிவிக்கப்பட்டன.  இதனையடுத்து  கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  அந்தவகையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான  விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி தொடங்கியது.  கடந்த 8 நாள்களில் பொறியியல் படிப்புகளில் சேர 91 ஆயிரத்து 38 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. இந்நிலையில் இன்று அந்த  எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள்

 மாணவ, மாணவிகள் https://www.tneaonline.org, https://www.tndte.gov.in என்ற இணையதளங்கள் மூலம் பொறியியல் படிப்புகளில் சேர  விண்ணப்பித்து வருகின்றனர். மேலும், மாணவர்களின் வசதிக்காக மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சேவை மையங்களிலும் விண்ணப்பப் பதிவு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று வரை விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்னிக்கை  1 லட்சத்தை கடந்துள்ள நிலையில்,  அவர்களில் 46 ஆயிரத்து 10 பேர் கட்டணம் செலுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.  அதிலும், 17 ஆயிரத்து 618 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருக்கின்றனர்.  பொறியியல் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு ஜூன் 4-ந்தேதியுடன் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.  பெரும்பாலான மாணவர்கள் கணினி அறிவியல், மெக்கானிக்கல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்திருப்பதாக பொறியியல் சேர்க்கைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.