வேட்டைத் தடுப்புக் காவலர்களுக்கான மாத ஊதியம் ரூ.15,625 ஆக உயர்வு

தமிழக வனத் துறையில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் 669 வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ரூ. 3,125 ஊதிய உயர்வு வழங்கி, அதை கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் கணக்கிட்டு வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழக வனத் துறையில், வனவிலங்குகளை வேட்டையில் இருந்து பாதுகாக்கவும், மரங்கள் கடத்துவதைத் தடுக்கவும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.10000 லிருந்து ரூ.12 ஆயிரமாக கடந்த 2019-ம் ஆண்டு உயர்த்தப் பட்டது. இந்நிலையில், அவர்களது பணியைக் கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி ரூ.12,500 லிருந்து ரூ.15,625 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. வேட்டைத் தடுப்பு காவலர்களுக்கு ரூ. 3,125 ஊதிய உயர்வு வழங்கி, அதை கடந்த 2024 ஏப்ரல் மாதம் முதல் கணக்கிட்டு வழங்குவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு மூலம் 669 வேட்டைத் தடுப்பு காவலர்கள் பயன் பெறுவார்கள்