நடிகை நக்மாவிடம் வங்கி அதிகாரி போல் பேசி பணம் அபேஸ்

 
n

நடிகை நக்மாவிடம் வங்கி அதிகாரி போல் பேசி ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அபேஷ் செய்திருக்கிறார் மர்ம நபர்.  நக்மாவை போல் மும்பையில் அண்மையில் 80 பேரிடம் இது போன்று ஆன்லைன் மூலமாக பணத்தை மோசடி  செய்திருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

இந்தி படத்தில் 1994 ஆம் ஆண்டில் நடிகையாக அறிமுகமான நக்மா பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து, அதன் பின்னர் தமிழில் காதலன் படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் பாட்ஷா, வில்லாதி வில்லன் , மேட்டுக்குடி,  சிட்டிசன்,  தீனா நடித்த பல படங்களில் நடித்தவர்,  பின்னர் சினிமாவில் இருந்து விலகி  காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து அக்கட்சியில் முக்கிய பொறுப்பை வகித்து வருகிறார்.

g

 இந்த நிலையில் மும்பையில் வசித்து வரும் நக்மாவிற்கு தனியார் வங்கியின் பெயரில் மெசேஜ் வந்திருக்கிறது.  அந்த மெசேஜை நக்மா ஓபன் செய்திருக்கிறார். அப்போது வங்கி அலுவலர் போல் ஒருவர் பேசியிருக்கிறார்.   அவர் வங்கியின் கேஒய்சி புதுப்பிக்க உதவுவதாக கூறியிருக்கிறார்.  அதற்கு,  நக்மா சரி என்று சொல்லிவிட்டு அவரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். 

 அப்போது நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து 99. 998 ரூபாயை வேறு வங்கி கணக்கிற்கு மாற்றி இருக்கிறார்.  அந்த நபர் இதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்த நக்மா அவரிடம் அது குறித்து பேசிய பின்னர் லைனைத் துண்டித்திருக்கிறார். இதன் பின்னர்தான் தனது வங்கிக்கணக்கில் இருந்து  99. 998 ரூபாயை அபேஸ் செய்திருப்பது தெரியவந்தது.

இதை அடுத்து மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருக்கிறார்  நக்மா.  அந்த புகாரில்,  எனக்கு வந்த மெசேஜில் கொடுக்கப்பட்ட லிங்கில் கேட்கப்பட்ட எந்த விவரங்களையும் நான் பகிரவில்லை . ஆனாலும் செல்போனில் பேசிய நபர் கேஒய்சி புதுப்பித்து தருவதாக சொல்லி இன்டர்நெட் பேங்கிங் மூலம் வேறு வங்கி கணக்கிற்கு பணத்தை மாற்றி இருக்கிறார் என புகாரில் கூறியுள்ளார்.

 போலீசார் இது குறித்த விசாரணையில் இறங்கிய போது தான்.   நக்மாவை போலவே மும்பையில் இதுவரைக்கும் 80 பேரிடம் ஆன்லைன் மூலமாக இதுபோன்ற மோசடி செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.  இதை அடுத்து போலீசார்  வங்கியின் பெயரில் வரும் லிங்கை ஓபன் செய்ய வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.