"சினிமா வாய்ப்பு என சொல்லி பாலியல் தொல்லை..." கண்ணீருடன் மோனாலிசா

 
ச்

இயக்குநர் சனோஜ் மிஸ்ரா என்னிடம் பலமுறை மோசமாக நடந்து கொண்டார் என கும்பமேளா புகழ் மோனாலிசா பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

மஹா கும்பம் பரபரப்பு மோனாலிசா படத்தின் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் 2025 மகா கும்பமேளாவின் போது வைரலான இளம் பெண் மோனாலிசாவுக்கு இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தி டைரி ஆஃப் மணிப்பூர் படத்தில் நடிக்க, அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு வழங்கியதன் மூலம் உலகம் முழுவதும் அறியப்பட்டார். காந்திகிரி, ராம் கி ஜென்மபூமி, லஃபாங்கே நவாப், தர்ம் கே சவுதாகர் மற்றும் காஷி டு காஷ்மீர் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ள சனோஜ் மிஸ்ரா மீது மோனாலிசா பாலியல் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து மோனாலிசா கூறுகையில், “படப்பிடிப்பின் போது அவர் தவறாக நடந்துகொண்டார், பெற்றோரிடம் இதுகுறித்து சொன்னபோது அட்ஜஸ்ட் செய்து கொள் என சொன்னார்கள்.. வேறு வழியின்றி அங்கிருந்து வெளியேறி கேரளா வந்தேன்... தன் காதலன் ஃபர்மான் கானுடன் திருமணம் செய்து கொண்ட பிறகு லவ் ஜிகாத் என சித்தரித்ததும் சனோஜ் மிஸ்ரா தான்.. இயக்குனர் சனோஜ் மிஸ்ரா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்போகிறேன்” என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.