WAVES 2025: மோகன்லால் முதல் ரஜினி வரை மும்பையில் முகாமிட்டுள்ள நடிகர்கள்
மே 1 முதல் 4 வரை மும்பையில் வேவ்ஸ் 2025 என்ற உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு நடைபெறுகிறது.
உலக ஆடியோ-விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES 2025) தொடர்பாக முக்கிய பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்திய அரசால் நடத்தப்படும் இந்த உலகளாவிய நிகழ்வில், கலை, இசை, வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். 1,100-க்கும் மேற்பட்ட சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்ட பதிவுகளுடன், வேவ்ஸ் 2025 என்பது திரைப்படத் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப முன்னோடிகள், படைப்பாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களும் வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
At the Waves Summit , Mumbai@PMOIndia @rajinikanth @mithunda_off @dreamgirlhema @KChiruTweets @akshaykumar @MIB_India #WAVES2025 #WAVESummitIndia pic.twitter.com/kk7Kqu6nUR
— Mohanlal (@Mohanlal) May 1, 2025
முதல்நாளான இன்று வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டில் நடிகர்கள் மோகன்லால், ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை மோகன்லால், தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.


