ஊடகவியலாளர் முகமது ஜூபேருக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம்!!

 
tn

கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கத்தை ஊடகவியாளர் முகமது ஜூபேருக்கு வழங்கி கெளரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

tn
75வது குடியரசு தினத்தை ஒட்டி சென்னையில் ஆளுநர் ரவி தேசியக்கொடி ஏற்றினார் குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் , சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அத்துடன் தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதுகளை வழங்கி கெளரவித்தார்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அரசுப் பள்ளிக்காக தனது நிலத்தை நன்கொடையாக வழங்கிய ஆயி அம்மாள், ஊடகவியலாளர் முகமது ஜூபேர் உள்ளிட்டோர் விருதுகளை பெற்றனர்.

tn

இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்து கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம் பெற்ற ஊடகவியலாளர் முகமது ஜூபேர், தமிழ்நாடு அரசிடம் இருந்து மத நல்லிணக்க விருதைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி. அரசாங்கத்திடம் இருந்து எனக்கு விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. குடியரசு தினத்தன்று அரசிடம் இருந்து இத்தகைய அங்கீகாரம் பெறுவது நெகிழ்ச்சி அடையச் செய்கிறது. தமிழ்நாடு அரசுக்கு நன்றி என்றார்.